வலிமையான இந்தியா மட்டுமல்ல, பசுமையான இந்தியாவும் நமக்குத் தேவை: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு!!
2020-10-29@ 14:20:16

டெல்லி : வளர்ச்சியும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பும் ஒன்றோடொன்று கைகோர்த்திருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பின் பசுமை கட்டிடங்கள் மாநாடு 2020-ஐ மெய்நிகர் முறையில் துவக்கி வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அனைத்துப் புதிய கட்டிடங்களும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்படுவதை கட்டாயமாக்குவதை பரிசீலிப்பதற்கான நேரம் வந்து விட்டதென குறிப்பிட்ட அவர், வலிமையான இந்தியா மட்டுமல்ல, பசுமையான இந்தியாவும் நமக்குத் தேவை என்றார். வரி சலுகைகள் மற்றும் இதர நடவடிக்கைகளின் மூலம் பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிக்குமாறு அரசுகள், நிதி ஆணையங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 'புதிய கட்டிடங்கள் மட்டுமல்ல, பழைய கட்டிடங்களும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். மின்சார சிக்கனமும், தண்ணீர் சேமிப்பும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.பசுமைக் கட்டிடங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பருவநிலை மாற்றம் என்பது உறுதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தேவை. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தப் பொருட்களை கட்டிடங்களின் கட்டுமானத்தில் பயன்படுத்த வேண்டும்,' என வலியுறுத்தினார். பசுமையான, சுகாதாரமான, வளமான இந்தியாவை கட்டமைக்க அரசுகளுடன் கட்டுமானத் துறை இணைந்து பணிபுரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகள்
போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டது யார்?.. டெல்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சரே பொறுப்பு: அமித்ஷா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
நெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
மக்களை தியாகம் செய்ய வரவில்லை: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் விலகல்.!!!
'எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்களே'...நரபலி கொடுத்த கொடூர பெற்றோர் இறுதிச்சடங்கில் போலீசாரிடம் ஆவேசம் .
2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.375 உயர்த்தி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!