கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி.!!!
2020-10-29@ 11:42:22

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை காலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகம் மூலமாக பல கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய சொப்னா கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சொப்னாவுடன் கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததால், விசாரணை வளைத்தில் அவரும் சிக்கினார். சுங்க இலாகா, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து, நேற்று காலை சிவசங்கரின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு வெளியான ஒரு சில நிமிடத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள், சிவசங்கர் சிகிச்சை பெற்று வந்த திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். சிவசங்கரின் உடல்நிலை குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, சிவசங்கர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து, அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்து காரில் கொச்சிக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான சிவசங்கரனை 14 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை கேரள உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. இருப்பினும், சிவசங்கரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிவசங்கரிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள சட்டசபைக்கு இன்னும் 6 மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் சிவசங்கரனை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துள்ளது ஆளும் இடதுசாரி அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
நாடு முழுவதும் ஒரே நாளில் அதிகபட்சமாக 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்