பெண் எஸ்.ஐக்களிடம் சில்மிஷம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்: டி.ஜி.பி. நடவடிக்கை
2020-10-29@ 01:18:47

ஈரோடு: ஈரோட்டில் பெண் எஸ்.ஐ.க்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர், சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தின்கீழ் தளத்தில் இயங்கும் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் 2 பெண் எஸ்.ஐ.க்களிடம், அந்த பிரிவின் உயர் அதிகாரியான இன்ஸ்பெக்டர் சேகர் என்பவர் கடந்த சில மாதங்களாக பாலியல் ரீதியாக ஆபாச வார்த்தைகள் பேசி, சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து பெண் எஸ்.ஐ.க்கள், ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் ஒரு தனிக்கமிட்டி விசாரணை நடத்தி, அறிக்கை தயார் செய்யப்பட்டது.
இதில் இன்ஸ்பெக்டர் சேகர், பெண் எஸ்.ஐ.க்களிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டதும், ஆபாச வார்த்தைகள் பேசியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எஸ்.பி. தங்கதுரை, விசாரணை அறிக்கையை தொழில்நுட்ப பிரிவின் டி.ஜி.பி.க்கு அனுப்பி வைத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சேகரை, டி.ஜி.பி. சென்னைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். சேகரிடம், டி.ஜி.பி. தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த முடிவின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:
Female SI Silmisham Inspector Transfer DGP Action பெண் எஸ்.ஐ சில்மிஷம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் டி.ஜி.பி. நடவடிக்கைமேலும் செய்திகள்
நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று கணவன் தற்கொலை
வண்ணாரப்பேட்டையில் ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை
வீட்டில் ரகசிய பயிற்சி பட்டதாரி வாலிபரிடம் 3 துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை
படிக்க வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போனில் விளையாட்டு ஆன்லைன் கேமில் ரூ.60 ஆயிரம் இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவன்: தாயின் நகைகளையும் அடகு வைத்தது அம்பலம்
அமைச்சர் குறித்து அவதூறு திமுக நிர்வாகி கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வீரர் அறிவிப்பில் முறைகேடு: 2ம் இடம் பிடித்தவர் கலெக்டரிடம் புகார்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!