உள்ளாட்சி ஊழியர் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
2020-10-29@ 00:39:38

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், கிராம நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தனுசு வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் பழனி, பொருளாளர் பரசுராமன், மதுராந்தகம் ஒன்றிய முன்னாள் செயலாளர் வேதாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த 16.3.2020 அன்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டபடி டேங்க் ஆபரேட்டர்களுக்கு 1,400, தூய்மை காவலர்களுக்கு 1,000 கூடுதல் ஊதியம், துப்புரவு பணியில் 3 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் ஆகிய அறிவிப்புகளுக்கான அரசாணை வெளியிட வேண்டும்.
அனைவருக்கும் 7வது ஊதியக்குழு விதிகளின்படி சம்பளம் வழங்குதல், பணிப் பதிவேடுகளை பராமரித்தல், தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு சீருடைகள், கையுறைகள், டார்ச் லைட், குடை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகள்
அமித்ஷா கையில் தலையாட்டி பொம்மை: ப.சிதம்பரம் கிண்டல் ட்வீட்
தொடரும் இழுபறி!: தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை..!!
பாலியல் சர்ச்சை விவகாரத்தில் சிறப்பு டிஜிபிக்கு உதவிய உயர் அதிகாரிகள்: முதல் தகவல் அறிக்கையில் அம்பலம்
சட்டமன்ற தேர்தல் 2021!: அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல்...ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவிப்பு..!!
3 மாதங்களில் 225 உயர்வு: காஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் பாய்ந்தது வழக்கு: விசாரணை அதிகாரியாக எஸ்பி. முத்தரசி நியமனம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்