கொரோனாவை காரணம் காட்டி லேப்டாப், சைக்கிள் வழங்குவதை நிறுத்தக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்
2020-10-29@ 00:23:16

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மடிக்கணினிகள் மற்றும் மிதிவண்டிகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அந்தத் திட்டங்களை நடப்பாண்டில் மட்டும் கைவிட்டு, அதற்கான நிதியை கொரோனா தடுப்புப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலைக் காரணம் காட்டி இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைக் கைவிடக் கூடாது. நடப்புக் கல்வியாண்டு நிறைவடைய இன்னும் 6 மாதங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில், கொள்முதல் பணிகளை உடனடியாகத் தொடங்கி பொங்கல் திருநாளுக்குள் மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Corona causative laptop bicycle do not stop loving insistence கொரோனா காரணம் காட்டி லேப்டாப் சைக்கிள் நிறுத்தக் கூடாது அன்புமணி வலியுறுத்தல்மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு: வெற்றி பெற்றால் இடைத்தேர்தல்..! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தெலங்கானாவில் ஜூலை 8ல் புதிய கட்சி தொடங்குகிறார் சர்மிளா: 2023ல் ஆட்சியை பிடிக்க வியூகம்
அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏ உட்பட 6 பேர் நீக்கம்: ஓபிஎஸ் - இபிஎஸ் அதிரடி நடவடிக்கை
சொல்லிட்டாங்க...
போர்க்கால அடிப்படையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தன்னுடைய அரசியல் லாபத்துக்காக பாமகவுடன் கூட்டணி சேர்ந்து சாதி வெறியை தூண்டுகிறார்: எடப்பாடி மீது ரவிக்குமார் எம்பி குற்றச்சாட்டு
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!