10 மாதமாக முடங்கிக் கிடக்கும் உலகம்; கொரோனா ஒரு அரசியல் சதித்திட்ட ‘வைரஸ்’25 நாடுகளில் ‘கேம்பிரிட்ஜ்’ நடத்திய ஆய்வில் பகீர் தகவல்
2020-10-28@ 21:55:34

லண்டன்: கொரோனா ஒரு அரசியல் சதித்திட்ட ‘வைரஸ்’ என்று உலகின் 25 நாடுகளில் ‘கேம்பிரிட்ஜ்’ நடத்திய ஆய்வில் பெரும்பாலான மக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். சீனாவின் வூகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகின் பல நாடுகளிலும் பரவி ஒட்டுமொத்த மக்களையும் முடக்கி போட்டுள்ளது. கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக இந்த தொற்றுநோய் பரவி வருவதால் இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலகின் 25 நாடுகளில் ‘கேம்பிரிட்ஜ்’ பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் விபரம் வருமாறு: உலகின் பெரும்பாலான மக்கள் கொரோனா தொற்றுநோயை ஒரு அரசியல் சதித்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வைரஸ் என்கின்றனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை யதார்த்தத்தை விட அதிகமாக இருப்பதாக அரசாங்கங்கள் தெரிவிக்கின்றன என்று நைஜீரியாவில் 60% பேர், கிரீஸ், தென்னாப்பிரிக்கா, போலந்து மற்றும் மெக்ஸிகோவில் 40%க்கும் அதிகமான மக்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் 38%, ஹங்கேரியில் 36%, இத்தாலியில் 30%, ஜெர்மனியில் 28% மக்கள் கொரோனாவால் பலர் இறப்பதில்லை என்று கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் ஒரு இயற்கையான தொற்றுநோய் அல்ல; சீனா அல்லது அமெரிக்கா இதனை உலகில் பரப்பியுள்ளதாக போலந்தில் ஐந்து பேரில் ஒருவர் கூறுகின்றனர். துருக்கி, எகிப்து, சவுதி அரேபியா மக்களும் குழப்பமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டது என்று 13% அமெரிக்கர்கள் நம்புகின்றனர். அதேசமயம், 17% பேர் தங்கள் அரசாங்கமே கொரோனாவை பரப்பிவிட்டதாக கூறுகின்றனர். கொரோனா தொடர்பான போலி தகவல்கள் பல நாடுகளில் 5-ஜி இணைய தொழில்நுட்பம் வாயிலாக பரப்பப்படுகிறது என்று துருக்கி, எகிப்து, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளில் ஐந்து பேரில் ஒருவர் கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 20%க்கும் அதிகமான மக்கள், கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுவது குறித்து பொதுமக்களிடம் அரசாங்கம் உறுதியளிக்கவில்லை என்று கூறியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் 57%, துருக்கியில் 48%, பிரான்சில் 38%, அமெரிக்காவில் 33%, ஜெர்மனியில் 31% மற்றும் ஸ்வீடனில் 26% மக்கள் அதே கருத்தை தெரிவித்து உள்ளனர் என்று கேம்பிரிட்ஜ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அமெரிக்காவின் புதிய அதிபராகும் பிடென் ஆட்சி நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினர்: வெள்ளை மாளிகையில் 17 பேருக்கு முக்கிய பொறுப்பு
சீனா ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்: பீதியை கிளப்பும் புது தகவல்
அமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில் டிரம்பை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி பெண்: சர்வதேச பத்திரிகைகள் பாராட்டு
ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் ... புது குண்டை தூக்கிப்போடும் சீனா : சாப்பிட்டவர்களை தேடும் அதிகாரிகள்
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி :அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!!
இந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்ச; நன்றி கூறிய பிரதமர் மோடி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்