குறையும் கொரோனா ஆட்டம்...!! அலட்சியமான மக்கள்; தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு பாதிப்பு உறுதி; ஒரே நாளில் 35 பேர் உயிரிழப்பு
2020-10-28@ 18:30:55

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,16,751-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
* தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,16,751 ஆக அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,79,377 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 3,859 பேர் குணமடைந்துள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 11,018 ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 688 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 197751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை 97,32,863 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 72,433 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 201 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 26,356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,32,620 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,508 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,84,099 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,008 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.
* வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மதுராந்தகம் அருகே சிந்தாமணி கிராமத்தில் ஏரி நீரில் மூழ்கி குடிசை வீடுகள் நாசம்: குழந்தைகளுடன் வெளியேறிய மக்கள் அவதி
காஞ்சிபுரம் சரிகை தொழிற்சாலையில் ஊழியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
நண்பரின் பிறந்தநாளின்போது கிணற்றில் மூழ்கி மண் எடுக்க முயன்றவர் பலி
வாகனம் ஓட்டும் கலையை பயின்றால் பெண்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை: கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தல்
திருமுல்லைவாயலில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
அரண்வாயல் குப்பம் பகுதியில் நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி சாலை மறியல்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!