தேர்வு கட்டணம் செலுத்திய 1.2 லட்சம் அரியர் மாணவர்கள் தேர்ச்சி: தேர்வு முடிவுகளை வெளியிட்டது சென்னை பல்கலைக்கழகம்..!!
2020-10-28@ 17:50:36

சென்னை: அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி வழங்கி தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஏப்ரலில் தேர்வு எழுதுவதற்காக கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்திய 1.2 லட்சம் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க பல்கலைக்கழக ஆட்சிமன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல், மே மாதங்களில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும். இந்த முடிவு செயல்வடிவம் பெறும் பட்சத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுமார் 150 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற வாய்ப்புள்ளது.
அரியர் தேர்ச்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அரியர் மாணவர்களுக்கு இன்டர்னல் தேர்விலிருந்து 70%, முந்தைய தேர்விலிருந்து 30% கணக்கிட அரசு அறிவுறுத்தப்பட்டது. அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்திய 1.2 லட்சம் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை egovernance.unom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் மதிப்பெண் தேவைப்படுவோர் அடுத்து அறிவிக்கப்படும் தேர்வை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!!!
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா..! நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!