பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் குழு அளித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை..! '
2020-10-28@ 16:04:01

சென்னை: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் குழு அளித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கொரோனா காரணமாகத் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தனிநபர் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால் மீண்டும் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில், முன்னாள் தலைமைச் செயலர் என்.நாராயணன்,சென்னைப் பல்கலை துணைவேந்தர், பி.துரைசாமி, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் என்.குமார், சென்னை பொருளாதாரப் பள்ளி இயக்குநர் கே.ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
மேலும், கடந்த மாதம் , முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு 275 பக்க அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் குழு அளித்த அறிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பொருளாதார மேம்பாடு குறித்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பங்கேற்று உள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழகம் முழுவதும் 6,156 பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் மேலும் 589 பேருக்கு கொரோனா
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தெலங்கானா ஆளுநர் வேண்டுகோள்
8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
எந்தவித கண்காணிப்போ,கட்டுப்பாடோ இல்லாமல் அரங்கேறும் அசிங்கங்கள் சமூக வலைதளமா... ஆபாச களமா? கடுமையான தண்டனைகளுடன் சட்டம் கொண்டு வருமா மத்திய அரசு
யூடியூப் சேனல்கள் எல்லைமீறி செயல்படுகின்றன: எஸ்.பிரபாகரன்,மூத்த வக்கீல், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்