போலீஸ் துப்பாக்கிச்சூடு கருப்பின வாலிபர் பலி: வன்முறை வெடித்ததில் 30 போலீசார் காயம்
2020-10-28@ 01:16:25

பிளடெல்பியா: அமெரிக்காவின் பிளடெல்பியாவில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கருப்பின வாலிபர் பலியானதால், மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அமெரிக்காவில் கருப்பின வாலிபரான ஜார்ஜ் பிளாட்டை சில மாதங்களுக்கு முன் போலீசார் கொன்றதால், போராட்டம் வெடித்தது. இது, உலகளாவிய போராட்டமாக மாறியதால் அதிபர் டிரம்ப்புக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அதிபர் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு கருப்பின வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. அமெரிக்காவின் பிளடெல்பியாவில் கத்தியுடன் சுற்றிய கருப்பின வாலிபர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற காட்சிகள் வெளியாகி, பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர் பெயர் வால்டர் வாலஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு போராட்டம் வெடித்தது. இதில், வன்முறை வெடித்தது. போலீசாரின் கார்கள் எரிக்கப்பட்டன. மேலும், கல்வீச்சி்ல் 30 போலீசார், காயமடைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது... திணறும் உலக நாடுகள்
இலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்
கியூபா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை
பதவியேற்ற முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு
நார்வேயில் பயங்கரம்: தடுப்பூசி போட்ட 23 முதியோர் பலி
திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யாவும் விலகியது: குறைகளை களைய முடியவில்லை என குற்றச்சாட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்