அதிகாரம், அகந்தையால் மக்கள் வாழ்க்கையில் இருள் சூழ்ந்துள்ளது: சோனியா காந்தி குற்றச்சாட்டு
2020-10-28@ 01:09:58

புதுடெல்லி: ‘தனது அதிகாரம், அகந்தையால் பீகார் அரசானது அதன் ஜனநாயக பாதையில் இருந்து விலகி விட்டது,’ என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விமர்சித்துள்ளார். பீகார் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 4 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ செய்தியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ள விவரம் வருமாறு: ஆட்சி அதிகாரம் மற்றும் அகந்தையின் காரணமாக தற்போதைய பீகார் அரசானது அதன் ஜனநாயக பாதையில் இருந்து விலகிவிட்டது. அவர்கள் சொல்வதும், செய்வதும் எதுவும் சரியாக இல்லை. தொழிலாளர்கள் உதவியின்றி இருக்கின்றனர். விவசாயிகள் வேதனையில் இருக்கிறார்கள்.
இளைஞர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். பொருளாதாரத்தின் பலவீனமான நிலை காரணமாக மக்களின் வாழ்க்கை இருள்சூ ழ்ந்துள்ளது. மண்ணின் மகன்கள் கடுமையான வேதனையில் இருக்கின்றனர். தலீத் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினரும் அவலநிலையில் விடப்பட்டுள்ளனர். பீகார் மக்களின் குரலானது காங்கிரஸ் மற்றும் மகா கூட்டணியுடன் உள்ளது. இது தான் பீகாருக்கான அழைப்பாகும். பயம் மற்றும் குற்றத்தின் அடிப்படையில் கொள்கை மற்றும் அரசாங்கத்தை அமைக்க முடியாது. பீகார் இந்தியாவின் கண்ணாடி, நம்பிக்கை. பீகார் என்பது பெருமை மற்றும் இந்தியாவின் பெருமையாகும்.
இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சகோதர, சகோதரிகள் பீகாரில மட்டுமல்ல இந்தியா முழுவதிலும், உலகம் முழுவதிலும் உள்ளனர். ஆனால் இன்று அதே பீகாரானது கிராமங்கள், நகரங்கள், பண்ணைகள் அதன் சிறப்புக்காகவும், புதிய மாற்றங்களுக்காகவும் தயாராக இருக்கிறது.
மேலும் செய்திகள்
உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
மிரட்டல் கடிதத்துடன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் : முகேஷ் அம்பானியின் உயிருக்கு ஆபத்தா என விசாரிக்க மராட்டிய அரசு உத்தரவு!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!