SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவளம் மழைநீர் வடிகால் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: மாநகராட்சி ஆணையர் விளக்கம்

2020-10-28@ 00:35:57

சென்னை: கோவளம் வடிகால் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்தார். கோவளம் வடிகால் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மழைநீர் வடிகால் துறை தலைமை பொறியாளர் நந்தக்குமார் ஆகியோர் நேற்று ரிப்பன் மாளிகையில் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது. கடந்த 2016ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் ரூ.4034 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதில் முதற்கட்டமாக கூவம் மற்றும் அடையாறு வடிநிலப்பகுதிகளில் 406 கிமீ தூரத்துக்கு ரூ.1387.27 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக  கோவளம் வடிகால் திட்டம் ரூ.360 கிமீ தூரத்துக்கு ரூ.1243.15 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்க உள்ளது. இதனை 3 கட்டங்களாக செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் கட்ட பணிகள் ரூ.270.83 கோடியில் 52 கிமீ தொலைவுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.
கோவளம் வடிகால் திட்டத்தின் மொத்த பரப்பளவு 1138 ஹெக்டர். 980.7 ஹெக்டர் பரப்பளவில் (86.21%) தற்போது வீடுகள் உள்ளன. 149 ஹெக்டர் (13.10%) சாலைகள் உள்ளன. மீதம் உள்ள 7.8% ஹெக்டர் பரப்பளவில் கல்வாய் அமைய உள்ளது. மொத்த பரப்பளவில் ஒரு சதவீதத்தில் மட்டுமே, இந்த கால்வாய் அமைக்க உள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கோவளம் வடிகால் திட்டம் அமைக்கப்படும் பகுதிகளில், ஒருமணி நேரத்தில் அதிகபட்சமாக 68 மிமீ மழை பெய்யும் என கண்க்கிட்டால், இதன் மூலம் 773.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் 303.74 மில்லியன் லிட்டர் தண்ணீர் பூமிக்குள் உரியும். மீதம் உள்ள 469.7 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாக செல்லும். ஆனால் தற்போது அமைக்கப்படும் வடிகால் திட்டம் மூலம் 326.19 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். இதன் மூலம் 90 சதவீதம் மழைநீரை நம்மால் சேமிக்க முடியும்.

பொதுமக்களிடையே புரிதல் ஏற்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மண்டல அளவில் தலைமை பொறியாளர் தலைமையில்  இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுடன், டெங்கு தடுப்பு பணிகளும் தொடர்ந்து நடக்கிறது.  பொதுமக்கள் விழா காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்கு மாஸ்க் அணிவது மற்றும் தனி மனித இடைவெளி கடைபிடிப்பது ஆகிய விதிகள் கடுமையாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்