ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை : ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு
2020-10-27@ 15:10:13

ஜெனீவா: ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தடுப்பூசியான AD26-COV2-S அமெரிக்காவில் ஆய்வு நடத்தப்பட்டு வரும் நான்காவது தடுப்பூசி ஆகும்.
கடந்த மாத இறுதியில் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து 2-ம் கட்ட பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது.இந்நிலையில், ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பொது சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் ருக்ஸாண்ட்ரா டிராகியா அக்லி, தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்காக வரும் ஜனவரி மாதத்தில் கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு..!
நார்வே நாட்டில் ‘பைசர்’ தடுப்பூசி போட்ட 23 பேர் மரணம் : இறந்தவர்கள் அனைவரும் 80 வயதை கடந்தவர்கள்
கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா : உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்கியது!!
சீன ராணுவத்துடன் தொடர்பு: ஜியோமி உட்பட 9 நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்ப்பு: முதலீடுகளை திரும்ப பெற அமெரிக்கா கெடு
இந்தோனேஷிய தீவில் நிலநடுக்கம்: 34 பேர் பலி, 600க்கும் மேற்பட்டோர் காயம்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவு, மருத்துவமனை இடிந்தது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்