தமிழகத்தில் மூன்றாவது நாளாக 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா: 11 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு
2020-10-27@ 01:01:12

சென்னை: தமிழகத்தில் மூன்றாவது நாளாக 3 ஆயிரத்துக்கும் கீழ் தொற்று குறைந்த நிலையில் நேற்று 2,708 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7,11,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 11 ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழக சுகாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 72,236 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,708 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 4,014 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 6 லட்சத்து 71 ஆயிரத்து 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 29 ஆயிரத்து 268 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,956 ஆக உயர்ந்துள்ளது.
Tags:
In Tamil Nadu for the third day in a row less than 3 000 coronas close to 11 000 தமிழகத்தில் மூன்றாவது நாளாக 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா 11 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புமேலும் செய்திகள்
தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களில் மார்ச் 13-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு நன்றி... கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மு.க. ஸ்டாலின் ட்வீட்!!
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
தமிழக அரசு இயற்றிய வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி
கொள்கை முடிவு என சொல்லும் முதல்வர் அவர்களே!: 7 பேர் விடுதலை தொடர்பாக நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன?.. அற்புதம்மாள் கேள்வி..!!
“மு.க.ஸ்டாலினால் நாட்டுக்கு நன்மை’’ ...167 தொகுதியில் திமுக வெற்றி பெறும் : போரூர் சாமியார் அருள்வாக்கு
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!