மீண்டும் நேருக்கு நேர்.... ஐதராபாத்-டெல்லி
2020-10-27@ 00:17:40

துபாயில் இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த 2 அணிகளும் ஐபிஎல் தொடர்களில் 16 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் ஐதராபாத் 10ஆட்டங்களிலும், டெல்லி 6 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. இரு அணிகளு–்ம் கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில் தலா 5முறை வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளன. நடப்புத் தொடரில் 29ம் தேதி நடந்த லீக் போட்டியில் ஐதராபாத் 15ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. நடப்புத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
டெல்லி 14 புள்ளிகளுடன் தகுதிச்சுற்று வாய்ப்புக்கான பட்டியலில் தொடர்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களில் 2போட்டிகளில் வென்றால் தகுதிச்சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தலாம். அதற்கு மாறாக 3 போட்டிகளிலும் தோற்றால் தகுதிச்சுற்று வாய்ப்பு கேள்விக்குறிதான். ஏனென்றால் ஐதராபாத் உட்பட பல அணிகள் 14புள்ளிகள் பெறும் வாய்ப்பில் நீடிக்கின்றன. அப்படி ஒருநிலைமை வந்தால் ரன்ரேட்தான் வாய்ப்பை தீர்மானிக்கும். அதனால் இன்றைய போட்டியில் மட்டுமல்ல இனி வரும் போட்டிகளிலும் அதிக ரன், விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது 2 அணிகளுக்கும் மிக முக்கியம்.
மேலும் செய்திகள்
முஷ்டாக் அலி டி20 அரியானாவை வீழ்த்தி பரோடா த்ரில் வெற்றி
உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் ஸ்ரீகாந்த், சிந்து தோல்வி
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் முன்னிலை
முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது 14 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!