அடுத்த வாரம் அதிபர் தேர்தல் 5.8 கோடி அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்குப்பதிவு
2020-10-27@ 00:17:23

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாய கட்சி வேட்பாளர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். அதேபோல் துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன்பாகவே வாக்களிப்பதற்கான வசதி உள்ளது. கொரோனா வைரஸ் நோய் பரவல் அச்சுறுத்தலுக்கு இடையே அதிக அளவிலான மக்கள் முன்கூட்டியே வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்கூட்டியே தேர்தலில் இதுவரை 5.87 கோடி மக்கள் அதிபர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது முன்கூட்டியே பதிவான 5.83 கோடி வாக்குகளை விட அதிகமாகும். அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணுவது பல மணி நேரங்கள் நீடிக்கப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வாக்குகள் எண்ணிக்கை அடுத்த நாள் காலை, அல்லது பிற்பகல் வரை நீடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
* அமெரிக்காவில் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 25.7 கோடி பேர் உள்ளனர்.
* ஏறத்தாழ 24 கோடி மக்கள் இந்த ஆண்டு வாக்களிப்பதற்கு தகுதி உடையவர்கள் என்றும் குறிப்பிடப்பட் டுள்ளது.
* அமெரிக்க அதிபர் டிரம்ப் புளோரிடாவில் தனது சொந்த ஊரில் முன்கூட்டியே தனக்கு வாக்களித்து விட்டார். பிடென் வரும் 3ம் தேதி வாக்களிக்க உள்ளார்.
Tags:
Next week the presidential election 5.8 million Americans will vote அடுத்த வாரம் அதிபர் தேர்தல் 5.8 கோடி அமெரிக்கர்கள் வாக்குப்பதிவுமேலும் செய்திகள்
அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது... திணறும் உலக நாடுகள்
இலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்
கியூபா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை
பதவியேற்ற முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு
நார்வேயில் பயங்கரம்: தடுப்பூசி போட்ட 23 முதியோர் பலி
திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யாவும் விலகியது: குறைகளை களைய முடியவில்லை என குற்றச்சாட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்