திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு
2020-10-25@ 22:41:25

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன. கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்க தொடங்கியதால் அங்கு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கமான நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்கள் பக்கதர்கள் இன்றி நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி ‘கல்கி’ அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இது குறித்து தேவஸ்தான அர்ச்சகர்கள் கூறுகையில், ‘வரலாற்றில் முதன் முறையாக 2 பிரமோற்சவங்களும் வீதியுலா இன்றியும், தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடத்தாமலும், பக்தர்களின்றியும் நடந்து முடிந்தது.
விரைவில் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து, அடுத்த பிரமோற்சவத்தின்போது பாரம்பரிய கோலாகலத்துடன் கொண்டாட சுவாமி அருள் புரிய வேண்டும்’ என தெரிவித்தனர். இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும். திருப்பதியில் உள்ள அலிபிரி பூதேவி அரங்கில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
சாலைக்கு இந்தி நடிகர் பெயர்
டெல்லி மக்கள் தொகையில் 50 சதவீதம் கொரோனா பரிசோதனை 1 கோடியை தாண்டியது: வரலாற்று சாதனை என கெஜ்ரிவால் டிவிட்
எம்சிடி ஊழியர்கள் சம்பள நிலுவை விவகாரம் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற செயல்: உயர் நீதிமன்றம் காட்டமான விமர்சனம்
அரசு மற்றும் மாநகராட்சிகளை சேர்ந்த 550 பள்ளி வளாகங்களில் நாப்கின் எரியூட்டிகளை பொருத்த வேண்டும்: முதல்வர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பல்கலை வளாகங்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு வழங்கிய இழப்பீடு எவ்வளவு?: டெல்லி அரசுக்கு என்சிஎஸ்சி ஆணையம் கடிதம்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!