கொடைக்கானலில் சைக்கிள் சவாரிக்கு அனுமதி : சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
2020-10-25@ 13:33:40

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரிக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இ-பாஸ் இல்லாமலும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இ-பாஸ் பெற்றும் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலாப்பயணிகள் கண்டுரசிக்க பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா தோட்டம், கோக்கர்ஸ் வாக் ஆகிய 4 இடங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து இடங்கள் மூடப்பட்டுள்ளன. ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை- சைக்கிள் சவாரியும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரிக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவுப்படி, சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் அனுமதி அளித்துள்ளார். இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
9,11ம் வகுப்புகள் திறப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு: அமைச்சர் பேட்டி
வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பு இல்லை அமைச்சர் செங்கோட்டையனை ஆசிரியர்கள் முற்றுகை
வாக்காளர் பட்டியலில் பேரறிஞர் அண்ணா புகைப்படம்
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப திருவிழா ரத்து
நிவர் புயல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேசிய பேரிடர் மேலாண்மை மத்தியக் குழு ஆய்வு
கோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்