தீபாவளிக்கு முன் டாஸ்மாக் பார்கள் திறப்பு?
2020-10-25@ 01:59:29

சென்னை: தீபாவளிக்கு முன் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளுடன் இணைந்து 3 ஆயிரம் பார்கள் செயல்பட்டு வருகின்றது. இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அரசின் பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.
ஆனால், பார்களை திறப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் பார்கள் திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று சற்று அதிகரித்து வந்ததால் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி தரவில்லை.
இந்தநிலையில், தீபாவளிக்கு முன்பாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு தயாராகி வருவதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் டாஸ்மாக் பார்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, குறைந்த நபர்களை அனுமதிப்பது, இறைச்சி உணவுகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு பார்களை திறப்பது, வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகள்
குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்
ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
வியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஜோஸ் ஆலுக்காஸின் ‘‘ஷைன் ஆன் கேர்ள்’’
அகத்தீஸ்வரர் கோயில் நிலத்தை வைத்து வங்கியில் ரூ.69 கோடி கடன் பெற்றது எப்படி? அதிகாரிகள் விசாரணை நடத்த ஆணையர் உத்தரவு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்