கொரோனாவால் உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு பணி கோரி வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
2020-10-25@ 01:24:08

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக்கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியவர் தங்கலட்சுமி. கொரோனா சிகிச்சை பணியில் முன் களப்பணியாளராக ஈடுபட்ட அவர், கடந்த ஜூன் மாதம் கொரோனா பாதித்து உயிரிழந்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால் 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.அதன் அடிப்படையில், தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஏற்கனவே காப்பீட்டு நிறுவனம் மூலம் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்று விட்டோம். வேலையில்லாமல் உள்ள எனது இளைய மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அரசு அறிவித்துள்ளபடி எனது மகளுக்கு அரசுப் பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் செய்திகள்
ஸ்மார்ட் சிட்டி கடைகள் அமைப்பதை எதிர்த்து மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மெரினாவில் வியாபாரிகள் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது
ராகுல்காந்தி பூரண நலம்பெற வேண்டி காங்கிரஸ் கட்சியினர் 108 பால்குட ஊர்வலம்
தமிழகத்தில் தினசரி பாதிப்பு 13,000ஐ தாண்டியது: கொரோனாவால் ஒரே நாளில் 13,776 பேர் பாதிப்பு; 78 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை.!!!
வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு..!
ஆன்லைன் முறையை பயன்படுத்துங்கள்..! தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி தொடர்பான அவதூறு வழக்கு: முன்ஜாமின் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல்..!
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!