வில்லியனூரில் மதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு: 3 பேரை பிடித்து விசாரணை
2020-10-25@ 01:01:39

வில்லியனூர்: புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த பத்துக்கண்ணு பெட்ரோல் பங்க் அருகே சந்தோஷ்குமாருக்கு சொந்தமான மதுக்கடை உள்ளது. நேற்று இரவு 7.15 மணியளவில் மதுக்கடை பாரில் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் திடீர் என கடையின் முன்பக்க சுவரில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததது. இதனால் கடையின் முன்பக்கம் மதுவாங்க நின்றவர்களும், பாரில் மது அருந்திக் கொண்டருந்தவர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதுகுறித்த தகவலின்பேரில், வில்லியனூர் போலீசார் சென்று பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். அதனை தொடர்ந்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் வரும் 31-ம் தேதி முதல் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்
தேசிய வாக்காளர் தின போட்டியில் அரசினர் சிற்ப கல்லூரி மாணவர் முதலிடம்
மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் நிறைவடையாமலே விளையாட்டு மைதான பணி முடிந்ததாக கல்வெட்டு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!