முதல்வரின் பாதுகாப்பு: போலீஸ் வேன் மோதி பெண் பலி
2020-10-25@ 00:58:56

ஆத்தூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுவனஞ்சூரை சேர்ந்தவர் பூபதிராஜா (42). இவர் மனைவி பிரியா (30), தாய் செளந்தரம் (65) ஆகியோருடன் ராசிபுரத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காரில் 18ம் தேதி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, சேலத்தில் இருந்து சென்னை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், பூபதிராஜாவின் காரை சர்வீஸ் சாலைக்கு திருப்பினர். இதனால் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்த பாதுகாப்பு படையினரின் வேன், கார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரியா, செளந்தரம் ஆகியோரை சேலம் தனியார் மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு சௌந்தரம் நேற்று உயிரிழந்தார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் வரும் 31-ம் தேதி முதல் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்
தேசிய வாக்காளர் தின போட்டியில் அரசினர் சிற்ப கல்லூரி மாணவர் முதலிடம்
மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் நிறைவடையாமலே விளையாட்டு மைதான பணி முடிந்ததாக கல்வெட்டு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!