அண்ணா பதக்கம்’ பெற விண்ணப்பிக்கலாம்
2020-10-25@ 00:57:14

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீர செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.
2021ம் ஆண்டு வழங்கப்படவுள்ள பதக்கத்திற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீர செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு முதன்மை செயலாளர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை என்ற முகவரிக்கு 14.12.2020க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மேலும் செய்திகள்
9,11ம் வகுப்புகள் திறப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு: அமைச்சர் பேட்டி
வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பு இல்லை அமைச்சர் செங்கோட்டையனை ஆசிரியர்கள் முற்றுகை
வாக்காளர் பட்டியலில் பேரறிஞர் அண்ணா புகைப்படம்
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப திருவிழா ரத்து
நிவர் புயல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேசிய பேரிடர் மேலாண்மை மத்தியக் குழு ஆய்வு
கோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்