கபீல் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
2020-10-25@ 00:55:56

சென்னை: தமிழக அரசின் கபீல் புரஸ்கார்’ விருது பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார்’ விருது, ஒவ்வொரு ஆண்டும், தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும் அனைவரும் (அரசு பணியாளர்கள் நீங்கலாக) இந்த பதக்கத்தை பெற தகுதியுடையவராவர். ஒரு சாதி, இனம், வகுப்பை சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. மூன்று பேருக்கு விருது வழங்கப்படும்.
கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள், அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாக அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு முதன்மை செயலாளர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை என்ற முகவரிக்கு 14.12.2020-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 540 பேர் பாதிப்பு: 627 பேர் குணம்; 4 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
கோவை மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணமடைந்தது குறித்து உடனடியாக சிபிசிஐடி விசாரணை நடத்திட வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு வீடுகளுக்கே சென்று அடையாள அட்டை வழங்கப்படும்!: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு..!!
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை கருவான, முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் தேடப்படும் பவாரியா கொள்ளையனை 3 வாரத்திற்குள் கைது செய்ய உத்தரவு!!
எடப்பாடி பழனிசாமியை இயக்கும் பிரதமர் மோடியால் தமிழ்நாட்டை இயக்க முடியாது : கரூரில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை
கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்..! தமிழகத்தை சீரமைப்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு: கமல்ஹாசன் பேட்டி
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்