SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீர் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

2020-10-24@ 15:33:04

ஸ்ரீநகர் : இந்திய எல்லையில் பறந்து கொண்டிருந்த பாகிஸ்தானின் ராணுவ ட்ரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலால், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இருந்தே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அவ்வப்போது சீன வீரர்கள் எல்லையில் அத்துமீறி வருகின்றனர். அதே போல் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் ட்ரோன் எல்லை தாண்டியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.ஜம்மு-காஷ்மீர், கெரானில் இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தானின் ராணுவ ட்ரோன், இன்று காலை 8 மணி அளவில் பறந்து கொண்டிருந்துள்ளது. இதனைக் கண்ட இந்திய ராணுவ வீரர்கள், உடனே அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். சீன நிறுவனமான டி.ஜே.ஐ தயாரித்த அந்த ட்ரோன், மேவிக் 2 புரோ மாடலை சேர்ந்தது. இந்திய எல்லையை உளவு பார்க்கும் நோக்கோடு பாகிஸ்தான் அனுப்பி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்