SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நமது பெண்களுக்கு மரியாதை அளித்து அதிகாரமளிக்க நாம் உறுதியேற்க வேண்டும் :துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

2020-10-24@ 14:35:47

டெல்லி : துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.'புனித துர்கா பூஜை அன்று, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் எனது சக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,' என்று தனது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.'பாரம்பரிய பண்டிகையான துர்கா பூஜை இந்தியா முழுவதும், குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதியில் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, தெய்வ அன்னையை சக்திக்கான தெய்வமாகவும்- தேவி துர்கா, அறிவுக்கான தெய்வமாகவும்- தேவி சரஸ்வதி மற்றும் வளத்துக்கான தெய்வமாகவும்- தேவி லட்சுமி, மக்கள் வழிபடுகின்றனர்.

நமது பாரம்பரியத்தில் பின்பற்றப்பட்டு வரும் பெண்களுக்கு மரியாதை அளித்தல் என்பது துர்கா பூஜையின் போது சிறப்பான முறையில் வெளிப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, மாத்ரு சக்தி எனப்படும் நமது பெண்களுக்கு மரியாதை அளித்து அதிகாரமளிக்க நாம் உறுதியேற்க வேண்டும். வலிமைமிக்க தீமையை வீழ்த்த அனைத்து கடவுளர்களின் ஒருங்கிணைந்த சக்தியையும் துர்கை அன்னை பயன்படுத்தினார் என்று நம்பப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால் எத்தகைய நெருக்கடியையும் நாம் வெல்லலாம் என்பதை இந்த கடினமான காலகட்டத்தின் இது உணர்த்துகிறது,' என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்