SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுவனை கொன்று பிணத்துடன் ஓரின சேர்க்கை :கைதான வாலிபர் பகீர் வாக்குமூலம்

2020-10-24@ 11:03:57

மரக்காணம், :விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நொச்சிக்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தேவன்ராஜ் (13). கடந்த 9ம் தேதி இவன் மாயமானான். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர். விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் (20) என்பவன் சிறுவனை அழைத்துச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் தேவன்ராஜை அபினேஷ் கொலை செய்து நொச்சிக்குப்பம் காட்டுப்பகுதியில் புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மரக்காணம் வட்டாட்சியர் உஷா முன்னிலையில் போலீசார் நேற்று சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுவனின் உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து கைதான அபினேஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன் என் தந்தை கலைமணியும், தேவன்ராஜின் தந்தை கோவிந்தராஜூம் சீட்டு விளையாடினர். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக தேவன்ராஜியின் அண்ணன் எனது தந்தையை அடித்துவிட்டான். இதனால் அவர்களின் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்துடன் தேவன்ராஜை கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை புதைத்துவிட்டு விட்டதாக கூறி உள்ளார்.

இந்நிலையில் போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அபினேஷ் ஓரினச்சேர்க்கையில் நாட்டமுடையவராம். இந்நிலையில், முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சிறுவன் தேவன்ராஜை அவர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளார். சிறுவன் மறுத்ததால் சரமாரியாக அடித்துள்ளார். பின்னர் அவனது சட்டையை கழற்றி கழுத்தை இறுக்கி உள்ளார். மேலும் தலையிலும் கல்லால் தாக்கி உள்ளார். இதில் இறந்த சிறுவனின் பிணத்துடன் அபினேஷ் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பயந்துபோன அவர் சவுக்குத்தோப்பு அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் குழிதோண்டி புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதவர் போல் ஊருக்கு வந்து விட்டார்.
மேலும் கடந்தாண்டும் இதேபோல் ஒரு சிறுவனை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.

கொலையான அந்த சிறுவனின் பெயர் ரினேஷ் (11). அவனையும் சவுக்குத்தோப்புக்கு அழைத்துச்சென்று செல்போனில் ஆபாசபடம் பார்த்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டாராம். பின்னர் சிறுவனை அடித்துக்கொன்று பிணத்தை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அபினேஷை போலீசார் கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்