SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை அழிக்காதே.. 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் தர இழுத்தடிக்கும் ஆளுநருக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!

2020-10-24@ 10:31:37

சென்னை: 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரி, ஆளுநர் மாளிகை முன்பு மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த மாதம் 15ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. அந்த மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அந்த மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை.இந்நிலையில், இதுகுறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது என்று ஆளுநர் நேற்று முன்தினம் அறிவித்தார். இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க ேவண்டும் என்று அனைத்து கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க கோரியும்-தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க தவறி, மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆளுநருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி, உதயநிதி, கே.என்.நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றுள்ளனர். ' அழிக்காதே.. அழிக்காதே... கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை அழிக்காதே..மத்திய அரசே, மத்திய அரசே, தமிழகத்தை வஞ்சுக்காதே..உள்ளிட்ட கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு, திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்