SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனே ஒப்புதல் கோரி ஆளுநர் மாளிகை முன்பு திமுக இன்று ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

2020-10-24@ 01:11:53

சென்னை: 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக்கோரி, ஆளுநர் மாளிகை முன்பு மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மருத்துவக் கல்வியில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த மாதம் 15ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. அந்த மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அந்த மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கவில்லை.இந்நிலையில், இதுகுறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது என்று ஆளுநர் நேற்று முன்தினம் அறிவித்தார். இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க ேவண்டும் என்று அனைத்து கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க ேகாரியும்-தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க தவறி, மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்