SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடிவாளம் அவசியம்

2020-10-24@ 01:09:56

நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பங்கள் சாதகமாகவும், பாதகமாகவும் அமைவதுண்டு. நவீன தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.  அத்தகைய தொழில்நுட்ப புரட்சியில் சமூகவலைதளங்களின் பங்கு அளப்பரியதாக தற்போது கருதப்படுகிறது. உலகில் எந்த மூலையில் என்ன சம்பவம் நடந்தாலும், அடுத்த விநாடி செல்போன்களில் செய்தியாக வலம் வந்துவிடுகிறது. உலகத்தையே கைக்குள் அடக்கிவிட்ட இத்தகைய தொழில்நுட்பத்தை சிலர்  தவறாக பயன்படுத்துவதால் நாட்டில் பல்வேறு பிரச்னைகள் எழுகிறது. சமூகவலைதளங்களில் வரும் செய்தியை பார்த்து பத்திரிகை, ஊடகங்களுமே குழப்பமடைந்து விடுகின்ற சூழ்நிலை நிலவுகிறது.

எங்கோ, ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு கள ஆய்வு செய்யாத ஒரு விஷயத்தை தங்களுக்கு தோன்றியவாறு சித்தரித்து சமூக வலைதளங்களில் உலவவிடுவதால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். அரசியல், சினிமா, சமூக சேவகர்கள் உள்பட பல பிரபலங்கள் இதனால் தேவையற்ற மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் சராசரி மக்களும் குறிப்பாக பெண்கள்  தங்களுக்கு எதிரான தவறான தகவல்களால்  உயிரையே  மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.  வாலிபர்கள், சிறுவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பாலியல் ரீதியான பழிவாங்குதலுக்கு பயன்படுத்துவதும் அதிகரித்துவிட்டது. சுயகட்டுப்பாடு இல்லாமல் தான்தோன்றித் தனமாக ஆதாரமில்லாதவற்றை செய்திகளாக திரித்து தருவது சமூகவலைதள ஊடகங்களில் இயல்பாகிவிட்டது.

கேரளாவில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்புபவர்கள், மிரட்டுபவர்களுக்கு எதிராக 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தனி நபர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்புவதும் மிரட்டுவதும் அதிகரித்துள்ளதால் இதற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை வலுத்ததை தொடர்ந்து கேரள மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது.  
இதன் அடிப்படையில் 2000ம் ஆண்டில் ஐடி சட்டம் 66 ஏயின்படி நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் அந்த சட்டத்தை ஏற்கனவே ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அவசர சட்டம் கொண்டு வந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹10 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கையில் செல்போன் வைத்துள்ளவர்கள் எல்லாம் சமூகவலைதளத்தில் ஒரு செய்திசேனலை தொடங்கி தான் படித்ததையும், கேட்ட தகவல்களையும் வைத்து அவதூறு பரப்புவதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே, சமூகவலைதளத்தில் தகுந்த விதிமுறைகளுடன் கட்டுப்பாடும் வகுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை மத்திய, மாநில அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, சமூகத்தில் பொய்முகமூடியோடு வலம் வருபவர்களை அடையாளம் காண முடியும். உண்மை, வீட்டு வாசற்படி தாண்டும் முன்பே பொய் உலகை சுற்றிவந்துவிடும் என்ற பழமொழிக்கு ஏற்பத்தான் தற்போது சமூகவலைதளங்களில் சில தகவல்கள் பரவி வருவதால், கடிவாளம் போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் முக்கிய கடமை என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்