SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எஸ்.பி.ஐ. வங்கிப் பணி முதல்நிலைத் தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு குறைவான கட்ஆப் மதிப்பெண்கள் வழங்குவதா?: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

2020-10-24@ 01:08:00

சென்னை: எஸ்.பி.ஐ. வங்கிப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு-இடஒதுக்கீட்டுப் பிரிவினரைவிடக் குறைவான கட்-ஆப் மதிப்பெண்கள் வழங்குவதா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:  எஸ்.பி.ஐ (பாரத ஸ்டேட் வங்கி) ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்- பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தவரை விடக் குறைந்த கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆயில் இந்தியா லிமிடெட்டில் சீனியர் செக்யூரிட்டி ஆபீஸர் மற்றும் சீனியர் மெடிக்கல் ஆபீஸர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கட்டணம் ஏதுமில்லை என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் மட்டும் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது இன்னொரு அநீதி.  

ஒருபுறம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வேலைவாய்ப்பைப் பறித்து-இன்னொரு பக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கினை உச்சநீதிமன்றத்தில் விரைந்து நடத்தாமல் தாமதப்படுத்தி வரும் மத்திய பாஜ அரசு, முழுக்க முழுக்க இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு எதிரானது என்பது தினமும் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 10 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் ரத்து செய்யப்பட வேண்டும்.
இதைத் தட்டிக்கேட்கத் தயங்கி நிற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக இளைஞர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து வருகிறார். சமூகநீதிக்குப் போகிறபோக்கில் இன்னொரு துரோகத்தைச் செய்வதற்கு மத்திய பாஜக அரசுடன் பழனிசாமி திரைமறைவில் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறாரா? சமூகநீதி வரலாற்றில் இது போன்ற  வரலாற்றுப் பிழைகளுக்குத்  துணை போகும்  அதிமுகவும், அதன் ஆட்சியும் அடியோடு தமிழக மக்களால் நிராகரிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்