ஆளுநரை கண்டித்து சாலை மறியல் போராட்டம் த.பெ.திராவிடர் கழகத்தினர் கைது
2020-10-24@ 00:14:23

சென்னை: மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்காத தமிழக ஆளுநரை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் ைகது செய்தனர். மருத்துவ கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநரின் இந்த செயல்பாட்டை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று காலை கிண்டியில் உள்ள வேளச்சேரி நெடுஞ்சாலையில் நடந்தது. போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆளுநருக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் 50க்கும் மேறபட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கிண்டி மற்றும் அண்ணா சாலை செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைதொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிண்டி போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட தலைவர் குமரன் உட்பட 50க்கும் மேற்பட்டோரை குண்டுக்கட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். பின்னர் சமுதாய நல கூடத்தில் அடைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். இதனால் ஆளுநர் மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் பேரை கொன்று குவித்த மோடிக்கு திமுகவை பற்றி பேச உரிமையில்லை : மு.க.ஸ்டாலின் விளாசல்
அதிமுக அரசு பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குகிறது: ஸ்டாலின் விமர்சனம்
தலைசிறந்த மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவோம்: பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி
கலைஞர் வழியில் திமுக அரசை அமைக்க உறுதியேற்று மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம்: ‘செயல் வீரர்’ செயலி அறிமுக விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
சொல்லிட்டாங்க...
எங்களுக்கு தலா 2 எம்எல்ஏ சீட் பார்சல்: அதிமுக மாவட்ட செயலாளர்கள் திடீர் கெத்து
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!