SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏடிஎம்மில் டெபாசிட் செய்ய உதவுவது போல் நடித்து ரூ.21500 மோசடி- 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்

2020-10-23@ 13:06:45

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய உதவிய நபர் தன் கணக்கில் டெபாசிட் செய்து மோசடி செய்தார். பணத்தை 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.  துடியலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம்மில் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரமோகன் நேற்று தன் வங்கிக் கணக்கில் ரூ.21,500ஐ டெபாசிட் செய்ய சென்றார். அப்போது ஏடிஎம்மில் கீபேட் சரியாக வேலை செய்யவில்லை. இதை கவனித்த அருகில் மாஸ்க் அணிந்த நபர் ஒருவர் சந்திரமோகனுக்கு உதவினார்.

பின்னர் பணம் டெபாசிட் ஆகி விட்டதாக கூறி மர்ம நபர் வேகமாக தன் பைக்கில் சென்று விட்டார். குறுந்தகவல் செல்போனுக்கு வராததால் சந்தேகமடைந்த சந்திரமோகன் ஏ.டி.எம்.மில் கார்டு மூலம் இருப்பை சரி பார்த்தார். அப்போது தன் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் ஆகாதது தெரிந்தது.  இதையடுத்து சந்திரமோகன் வங்கி நிர்வாகத்தை அணுகி, தான் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் தெரிவித்தார். டெபாசிட் செய்ய உதவிய நபர் வேறு கணக்கில் செய்து மோசடி செய்தது தெரிந்தது. பின்னர், வங்கி நிர்வாகத்தினர் அந்த வங்கிக் கணக்கை முடக்க முயல்வதற்குள் அக்கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

 இதையடுத்து சந்திரமோகன் அளித்த புகாரின் பேரில் துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம், எஸ்ஐ தாமோதரன்  ஆகியோர் சிசிடிவி காட்சியை பெற்று விசாரணை நடத்தினர்.  இதில், கோவை ஒண்டிபுதூர் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம், தன் ஏடிஎம் கார்டு தொலைந்தததாகவும் அதை முடக்க வங்கிக்கு தெரிவித்தும் முடக்கவில்ைல. இந்த நிலையில் வங்கிக் கணக்கில் ரூ.20 ஆயிரம் டெபாசிட் ஆனது. அதை கார்டை எடுத்தவர் எடுப்பதற்கு முன் காசோலை மூலம் நான் பணத்தை எடுத்தேன், என தெரிவித்துள்ளார். இதையடுத்து பணத்தை அவரிடம் இருந்து மீட்டு சந்திரமோகனிடம் போலீசார் ஒப்படைத்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்தில் பணத்தை மீட்ட போலீசாருக்கு சந்திரமோகன் நன்றி  தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 02-12-2020

    02-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்