இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை முதன்முறையாக 7 லட்சத்திற்கு கீழ் இறங்கியது : குணமடைந்தோர் விகிதம் 90%-ஐ தொடுகிறது!!
2020-10-23@ 09:47:57

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.17 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 77 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 54,366 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 77,61,312 ஆக உயர்ந்தது.
* புதிதாக 690 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,17,306 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 73,979 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 69,48,497 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,95,509 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 89.53% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.51% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 8.96% ஆக குறைந்துள்ளது.
* இந்தியாவில் ஒரே நாளில் 14,42,722 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 10,01,13,085 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.
மேலும் செய்திகள்
செங்கோட்டையில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாது : மத்திய அரசு காட்டம்
இந்தியாவில் குறைகிறது கொரோனாவின் தாக்கம் : 20 நாட்களுக்கும் மேலாக புதிய பாதிப்புகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பலமாக உள்ளது: அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பெருமை
விவசாயிகளின் போராட்டம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்: குமாரசாமி ஆலோசனை
அரசு நிலம் டிநோடிபிகேஷன் செய்த புகாரில் எடியூரப்பா, நிராணியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
இரு கார்கள் மோதிய விபத்தில் இருவர் பலி
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!