SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூரரைப் போற்று திரைப்படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30ல் ரிலீஸ் இல்லை : நடிகர் சூர்யா அறிக்கை

2020-10-23@ 09:16:48

சென்னை : சூரரைப் போற்று திரைப்படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30ல் ரிலீஸ் இல்லை என சூர்யா அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதன்படி விளம்பரம் செய்யப்பட்டு வந்ததுஆனால் கடந்த ஒரு வாரமாக திடீரென விளம்பரம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைத்து இருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 'சூரரைப்போற்று படத்தின் பல காட்சிகள் இந்திய விமானப்படை குறித்து இருப்பதால் இந்திய விமானப்படையின் தடையில்லாச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அந்த சான்றிதழை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.எனவே அக்டோபர் 30ம் தேதி திட்டமிட்டபடி சூரரைப்போற்று திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை.இருப்பினும் மிக விரைவில் உறுதியான ரிலீஸ் தேதியை அறிவிக்க இருக்கிறோம்,' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்