SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உரிக்காமலே கண்ணீர்

2020-10-23@ 00:11:16

நமது உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ளப்படும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் பட்டியலில் வெங்காயத்துக்கு முக்கிய பங்குண்டு. உரிக்கும்போது  கண்ணீரை தந்தாலும், சமைக்கும்போது அற்புதமான ருசியை தரும்.  ஆனால், கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை, நடுத்தர, அடித்தட்டு மக்களை உரிக்காமலே கண்ணீர் விட வைத்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு வரை கிலோ ரூ.30 - 50 வரை விற்று வந்த சின்ன, பெரிய வெங்காயங்களின் விலை தற்போது ரூ.100 - 120 வரை விற்கிறது. இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிக அளவில் விளைகிறது.  

சமீபத்தில் இந்த மாநிலங்களில் எல்லாம் கடும் மழை பெய்தது. இதனால் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் கடும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இம்மாநிலங்களில் இருந்து, மூன்றில் ஒரு பங்கே விற்பனைக்காக பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. விலை அதிகரிப்பு காரணமாக ஆப்கானிஸ்தான், எகிப்து, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயம் சென்னை, மதுரை மற்றும் தமிழகத்தின் முக்கிய மார்க்கெட்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் விலை குறையலாம் என்ற கருத்து நிலவினாலும், இவ்வகை வெங்காயங்கள் உணவில் ருசியை கூட்டாது என்பதால் மக்களிடம் போதிய ஆர்வமில்லை.

மேலும், தட்டுப்பாட்டை காரணமாக காட்டி வெங்காயம் பதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. பொதுவாக, வெங்காயத்தை 3, 4 வாரம் வரை வீட்டிலேயே இருப்பு வைக்கலாம். எனவே, கூடுதல் விலைக்கு விற்பதற்காக குடோன்களில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கருத்து, எதிர்க்கட்சியினர், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த 2019ல் இந்தியா முழுவதும் 228.19 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி 268.56 லட்சம் டன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 17.69 சதவீதம் அதிகம். இந்த சூழலில் விளைச்சல் பாதிப்பு என்று கூறுவது ஏற்கும் விதத்தில் இல்லை.

ஆந்திராவில் புயல் மழை, வெள்ளத்தால் வெங்காய விளைச்சல் பாதித்ததாக கூறப்பட்டாலும், அங்கிருந்து இந்தியாவுக்கு 3.65 சதவீத அளவே வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. அப்படி இருக்கும்போது எப்படி தட்டுப்பாடு ஏற்படும்? இன்னொரு விஷயத்தையும் நாம் யோசிக்க வேண்டும். கடந்த செப். 15ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பருப்பு வகைகள், தானியங்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் போன்றவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் வராது. யாரும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

கடந்த சில வாரங்களாக பருப்பு, சமையல் எண்ணெய் வகைகள் விலை உயர்ந்து வருவதை நீங்கள் அறியலாம். அந்த வகையில் வெங்காயமும் அளவுக்கதிகமாக வாங்கப்பட்டு பதுக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இதனாலும் விலை அதிரடியாக உயர்ந்து இருக்கலாம். இப்பவே இந்த சூழல் என்றால், வேளாண் திருத்த சட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், அரிசி, கோதுமை உள்ளிட்ட விளைபொருட்களின் விலையும் கூட அதிகரிக்கும். அந்தந்த மாநில பட்டியலில் உள்ள முக்கிய உணவுப்பொருட்களுக்கு கூட செயற்கையான தட்டுப்பாடு சூழல் உருவாக்கப்படலாம். அப்படி சூழல் வந்தால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும் அவதியடைவார்கள். அவர்களின் துயரை தீர்த்து வைக்கும் திருத்த சட்டங்களை, இனியாவது மத்திய, மாநில அரசுகள் யோசிக்குமா?

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்