SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி சாமியார் பாணியில் பணம் கறக்கும் காவல் அதிகாரியை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2020-10-23@ 00:04:51

‘‘புதுச்சேரியில ‘சண்டே’ன்னாலே குழப்பம் தான் போலிருக்கே...’’ என்றார் பீட்டார் மாமா.
‘‘ம். புதுச்சேரி காந்திவீதியில் சண்டே மார்க்கெட் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதை பயன்படுத்தி தரைவாடகை என்ற பெயரில் ஒரு கும்பல் மாதத்துக்கு பல லட்சம் கல்லா கட்டுதாம். ஆனால் அங்கே நிரந்தரமாக கடை நடத்தும் உரிமையாளர்களுக்கு மாதத்துக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுதாம். இது குறித்து கடை வியாபாரிகள் புகாரில் முதல்வர் சண்டே கடைகளை மூட உத்தரவிட்டார். ஆனால் சண்டே வியாபாரிங்க முதல்வரை பார்த்தபோது அவர்களின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி தெறிக்க விட்டார். கொரோனா காலத்தில் சண்டே மார்க்கெட்டிற்கு தடை விதித்தார். இந்த உள்குத்து தெரியாத கலெக்டர்... சண்டே மார்க்கெட்டை எப்டி திடலுக்கு கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இது தெரியாமல் புதுச்சேரி முதல்வர் சண்டே மார்க்கெட்டுக்கு வேறு ஒரு இடத்தை தேர்வு செய்தாராம். இந்த தகவல் அறிந்த கலெக்டர் உச்ச கட்ட குழப்பத்துக்கு சென்று தான் போட்ட உத்தரவில் இருந்து சில மணி நேரங்களில் பின் வாங்கிட்டாராம். முதல்வர், கலெக்டரின் இந்த முரண்பட்ட தகவல் சமூகவலைதளத்தில் வைரலாகிவிட்டதாம்... இந்த விவகாரத்தில் சண்டே மார்க்கெட் வியாபாரிகள் மட்டுமல்லாது... பொதுமக்களும் வரும் சண்டே எங்கே போவது என்று மண்டையை பிய்த்து கொள்கிறார்களாம்...’’என்றார் விக்கியானந்தா.
‘‘இலை மந்திரியை மடிச்சு தேர்தலில் வீட்டில் உட்கார வைக்கும் வேலையில் இலையின் அடிபொடிகள் இறங்கி இருக்கிறார்களாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘சீ’ மாவட்டத்தில் மந்திரியை தோற்கடிக்க ‘லாங்வேஜ்’ பெயரை ெகாண்ட இலையின் ஆதரவாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பிராமிஸ், முறுக்கு, மீன்கொடி அரசர் ெபயரை கொண்டவர்கள் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார்களாம்... அதேபோல முன்னாள் மக்கள் பிரதிநிதியான ‘லாங்வேஜ்’க்கு சீட்டே கிடைக்கக் கூடாது என்று ‘சீ’ மாவட்ட அமைச்சரும் அவரின் அடிபொடிகளும்  முயற்சி செய்யறாங்களாம்...  இவர்களுக்கு இடையே அடிக்கடி அரசியல் மற்றும் திட்டப்பணிகள் சம்பந்தமாக பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மந்திரி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ ஆதரவாளர்கள் புறக்கணிப்பு செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் சீ மாவட்ட மந்திரி தோல்வி அடைவார் என கருத்து கணிப்பு இருந்தநிலையில் மாஜி எம்எல்ஏ ஆதரவு மூலம் வெற்றி அடைந்து மீண்டும் அமைச்சரானார்... வரும் சட்டமன்ற தேர்தலின்போது கடலூர் தொகுதியில் மந்திரி போட்டியிட்டால் படுதோல்வி அடைய எதிரணி ஒரு திட்டத்தை தீட்டி உள்ளனர். ஏனெனில் இவர் தோற்றால் தான் எதிரணியில் உள்ளவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என கனவில் உள்ளனர். இதற்காக எதிரணியினர் ‘சீ’ மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதியில் மந்திரி மட்டும் ஜெயிக்கக் கூடாது... அதற்காக தீவிரமாக வேலை பார்க்க வேண்டும். மற்ற 8 தொகுதியிலும் நாம் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என கணக்கு போட்டு அதற்கு உண்டான அணி சேர்ப்பு வேலையில் இறங்கி உள்ளனர். இதற்கிடையில் அமைச்சர் மகனும், தனது ஆதரவாளர்களை அழைத்து வார்டு வாரியாக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது... இவர்கள் முடிவு செய்து என்ன பயன் எல்லாம் மக்களின் விரல்களில் இருக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘காவல்துறை செய்தி ஏதாவது...’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.
 ‘‘கடற்கரையோர மாவட்டம் சிக்கல் முருகன் கோயில் பெயர் கொண்ட காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பழனிமலை சுவாமியின் பெயர் கொண்டவர் இருக்கிறார். இந்த காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் முதலில் சுவாமிக்கு தட்சணை வைக்க வேண்டுமாம்... தட்சணை வைத்தால் தான் புகார் மனு குறித்து இன்ஸ்பெக்டர் பேசவே ஆரம்பிப்பாராம்.. அப்படி இல்லை என்றால் சுவாமி தனக்கு உத்தரவு கொடுக்கவில்லை.
இதனால் புகார் மனு பற்றி எதுவும் செய்யமுடியாது என்று கூறி விடுவாராம்... கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டரின் காவல் நிலைய எல்லையில் மினிலோடு ஆட்டோ மோதியதில் பைக்கில் சென்றவர் இறந்துவிட்டார். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் டிரைவர் உடன் சென்ற கிளீனர் தான் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விட்டார் என சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரிடம் கூறி இன்ஸ்பெக்டர் மிரட்டினாராம்.. இதை மறைத்து விட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருந்த டிரைவர் தான் வாகனத்தை ஓட்டியதாக வழக்கை மாற்றி பதிவு செய்து தருகிறேன். இந்த வழக்கை மாற்றம் செய்ய முதலில் சுவாமிக்கு தட்சணை வைக்க வேண்டும். அதுவும் ₹20 ஆயிரம் தட்சணையை ஒரு மஞ்சள் துணியில் சுற்றி அதை எடுத்து வந்து நான் சொல்கிற இடத்தில் உள்ள சுவாமி படத்திற்கு முன்பு வைத்து விட வேண்டும். புதிதாக திரி ஒன்று போட்டு சுவாமி விளக்கை ஏற்றி விட்டு அந்த விளக்கு அணைவதற்குள் திரும்பி பார்க்காமல் அந்த இடத்தை விட்டு சென்றுவிட வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் கூறினாராம்... இதனால் வேறு வழியின்றி வாகன உரிமையாளர் தட்சணை பணத்தை எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் கூறிய இடத்திற்கு சென்றாராம்.. இன்ஸ்பெக்டர் கூறியது போல் தட்சணையை வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட்டார். வழக்கு குறித்து இன்ஸ்பெக்டரிடம் உரிமையாளர் கேட்ட போது சுவாமி இன்னும் உத்தரவு தரவில்லை. உத்தரவு வந்ததும் வழக்கை மாற்றி தருகிறேன். கூடுதல் தட்சணையை சுவாமி கேட்டாலும் தர வேண்டும். பணத்தை திருப்பி கேட்டால் தெய்வ குற்றத்திற்கு ஆளாகி விடுவீர்கள் என வாகன உரிமையாளரை மிரட்டி வருகிறாராம் இன்ஸ்பெக்டர்... சாமியின் பெயரை சொல்லி குற்றத்தை செய்யும் காக்கிகளை என்ன சொல்வது என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனையோடு சொல்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்