பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டில் 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி : கருத்துக் கணிப்பில் தகவல்!!
2020-10-22@ 15:25:53

பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் தொடர்பான டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் முதல்வர் நிதீஷ் குமார் மீது மக்கள் கடும் கோபத்துடன் உள்ளது தெரிய வந்துள்ளது. கருத்து கணிப்பின் போது, 'நிதீஷ் குமார் அரசு மீது கோபமாக உள்ளீர்களா.. அந்த அரசு மாற வேண்டும் என கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு 61.1 சதவீத மக்கள் ஆம் கோபமாக இருக்கிறோம், அரசு மாற வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். மேலும் 25.2 சதவதம் பேர் கோபமாக இருக்கிறோம், ஆனால் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். 13.7 சதவீதம் பேர் கோபம் இல்லை, ஆட்சியையும் மாற்றத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்ற மற்றறொரு கேள்விக்கு 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 24.29 சதவீதம் பேர்தான் மிகவும் அதிருப்தி எனத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடு தொடர்பான கேள்விக்கும் மோடிக்கே ஆதரவு அதிகம் உள்ளது. அதாவது 42.91 சதவீதம் பேர் அதிக திருப்தி என்று தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தி என்று கூறியுள்ளனர். 26.47 சதவீதம் பேரே திருப்தியே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 34.4 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணிக்கு 31 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு 5.2 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சசிகலா உடல்நிலை சீராக உள்ளது..! கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு
அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறி 2 மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்து பேராசிரியர் தம்பதி வெறிச்செயல் சித்தூர் அருகே கொடூரம்
முதலமைச்சர் பதவியில் இருந்து எந்த நேரத்திலும் நீக்கப்படலாம்!: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அதிருப்தி குரலால் அதிர்ச்சி..!!
ஒரே நாளில் 13,203 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 கோடியாக உயர்வு...1.53 லட்சம் பேர் பலி..!!!
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கு தெரியாமல் புதிய ஆப்களை பயன்படுத்தும் பாக். தீவிரவாத அமைப்புகள்: குறைந்த இன்டர்நெட்டிலும் வேகமாக செயல்படும்
முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீதான பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு: கேரள அரசு அதிரடி
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்