103 வயதில் ஸ்கை டைவிங்!
2020-10-22@ 12:36:17

நன்றி குங்குமம்
சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு விமானம் வேகமாகப் பறந்துகொண்டிருந்தது. ஓர் இடம் வந்ததும் அந்த விமானத்தின் வேகம் குறைய, அதிலிருந்த ஜன்னல்கள் திறக்கப்பட்டன. அடுத்த நொடியில் பயிற்சியாளர் ஒருவரின் உதவியோடு ஸ்கை டைவிங் அடித்தார் ஆல்பிரட். அவர் பூமியை நோக்கி கீழே வருவதை உற்சாகமாகக் கைதட்டி வரவேற்றனர் ஆல்பிரட்டின் உறவினர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த இவருக்கு வயது 103.உலகின் அதிக வயதான ஸ்கை டைவர் என்று கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டார். 99 வயதில்தான் ஆல்பிரட்டிற்கு ஸ்கை டைவிங் என்ற ஒரு விஷயம் இருப்பதே தெரிய வந்தது.
தனது 100வது வயதில் முதல் முறையாக ஸ்கை டைவிங் அடித்து இணையத்தில் வைரலானார். அப்போது, ‘‘எனது பேரன்கள் கல்லூரியில் பட்டம் வாங்கினால் அதைக் கொண்டாட ஸ்கை டைவிங் அடிப்பேன்...’’ என்று சபதமேற்றிருந்தார். சமீபத்தில் அவரது பேரன்கள் பட்டம் வாங்க, கொடுத்த வாக்கைக்
காப்பாற்றி சாதனையாளராகிவிட்டார் ஆல்பிரட்.
தொகுப்பு: த.சக்திவேல்
Tags:
103 வயதில் ஸ்கை டைவிங்!மேலும் செய்திகள்
மரங்களை ஆராய்ந்தால் சூரியனைப் புரிந்துகொள்ளலாம்!
ஹலோ பிரெசிடெண்ட்!
பள்ளி மட்டுமே போதுமா?
உங்களுக்கு என்ன போபியா?
உருளைக்கிழங்கின் கதை!
சரிகிறது இன்சூரன்ஸ் கோட்டை!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!