வைரல் தம்பதி!
2020-10-22@ 12:35:37

நன்றி குங்குமம்
சூரத்தைச் சேர்ந்த ஹனுமன் - ரட்டன் பென் தம்பதியினர்தான் அங்கே ஹாட் டாக். இன்று மாஸ்க் அணிவது கட்டாயமாகிவிட்டது. அப்படி அணியவில்லை என்றால் அபராதம் கூட வசூலிக்கப்படுகிறது. ஆனால், மாஸ்க் வாங்கக் கூட வருமானம் இன்றி தவிக்கும் நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய மக்களுக்கு தன்னால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும் என்று ஹனுமனுக்குத் தோன்ற, உடனே களத்தில் இறங்கிவிட்டார். தினமும் காலையில் எழுந்தவுடன் சூரத்தில் உள்ள ஒவ்வொரு டெய்லரிங் கடைக்கும் சென்று அங்கே வீணான துணிகளைச் சேகரிப்பார். மாலையில் வீடு திரும்பியவுடன் மனைவியுடன் சேர்ந்து அந்த துணிகளை மாஸ்க்காக தைத்துவிட்டுத்தான் உறங்கச் செல்வார்.
இப்படி நான்கு மாதங்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான மாஸ்க்குகளைத் தைத்து தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகக் கொடுத்துள்ளார் ஹனுமன்.
இந்தச் சேவையை அவர் வெளியில் சொல்லக்கூடவில்லை. மாஸ்க்கை இலவசமாக பெற்ற ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஹனுமனைப் பற்றி எழுத, வைரலாகிவிட்டனர் ஹனுமன் - ரட்டன் தம்பதியினர்.
தொகுப்பு: த.சக்திவேல்
Tags:
வைரல் தம்பதி!மேலும் செய்திகள்
ஊரடங்கில் கலக்கிய யூ-டியூப் சேனல்கள்!
திமிங்கலம் பாடும் பாட்டு! கேட்டு தலையை ஆட்டு!!
மண்பாண்டத் தொழிலுக்கு உலகிலேயே முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம்! வேலூரில் அமைகிறது!!
கை, கால்களில் மிக நீண்ட நகங்களை வளர்த்த பெண்
சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை
வாக்காளர் அடையாள அட்டை வெச்சிருக்கீங்களா?
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!