SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீகார் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. இந்தியில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் கற்பிக்கப்படும் : பாஜக வாக்குறுதி!!!!

2020-10-22@ 11:21:42

பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பாஜக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றவை பின்வருமாறு...

*பீகாரில் நகர், கிராமங்களில் 2022க்குள் சுமார் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

*பீகாரில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும்.புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘பீகாரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உயர்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 3 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் முந்தைய ஆட்சியில் வளர்ச்சி அடையவில்லை. எங்கள் அரசு மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கு முன்னுரிமை அளித்ததால் இந்த வளர்ச்சி சாத்தியமானது’ என்றார்.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல்

பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ம் தேதி என மூன்று  கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.பிகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் உள்ளார். அவரது கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைந்துள்ளது.

அதே போல, காங்கிரஸ்,  இடதுசாரிகள் மற்றும் ஆர்ஜேடி ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட ஏராளமான இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 02-12-2020

    02-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்