SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரி தீவிரவாதம்

2020-10-22@ 01:27:24

அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளை எல்லாம் விட இந்தியாவில் ஐபோன் 12 விலை அதிகம். துபாய் சென்று ஐபோன் 12 வாங்கி வந்தால் கூட இந்தியாவில் வாங்கும் விலையை விட லாபம் என்ற கணக்கு சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு பொருட்களின் மீதும் எக்கச்சக்க வரிச்சுமையை சுமத்தி வாங்க முடியாமல், கள்ளச்சந்தை விற்பனையை ஊக்குவித்து இருக்கிறது மத்திய அரசு.
ஐபோன் என்று இல்லை எந்த பொருளானாலும் இதே வரி விலைதான். பெட்ரோல், டீசல் விலை கூட அப்படித்தான். கச்சா எண்ணெய் உச்சத்தில் இருந்த போது, அதாவது ஒரு பேரல் 140 டாலர் இருந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் 80ஐ தொட்டது. 2014ல் பா.ஜ அரசு பதவி ஏற்ற பிறகு இன்று வரை கச்சா எண்ணெய் விலை எழும்பவே இல்லை. ஒரு பேரல் 40 டாலரில் இருந்து அதிகபட்சமாக 70 டாலர் வரைதான் வந்திருக்கிறது.

ஆனால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 80ஐ விட்டு இன்று வரை இறங்கவே இல்லை. எல்லாம் வரி செய்யும் மாயம். அப்ேபாது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரி 10க்குள். இப்போது வரி மட்டும் தமிழ்நாட்டில் 33. டீசலுக்கு 32. ஏஜென்ட் கமிஷன் வேறு. ஒருலிட்டர் பெட்ரோலுக்கு மட்டும் ₹35.66 வரி மற்றும் ஏஜெனட் கமிஷனாக கட்டிக்கொண்டு இருக்கிறோம். இப்படி ஒவ்வொரு பொருளும் கண்ணுக்கு தெரியாத விலை உச்சத்தை எட்டியிருக்கிறது. கேஸ் சிலிண்டர் கூட அப்படித்தான். மானியம் கழித்து ஒரு சிலிண்டருக்கு 440 கொடுத்து வாங்கிக் கொண்டு இருந்தோம். வங்கி கணக்கில் நேரடி மானியம் என்ற ஆசை காட்டி இப்போது இஷ்டத்திற்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. 610 சென்னையில் விலை கொடுத்து வாங்கினோம் என்றால் வங்கி கணக்கில் எவ்வளவு வந்து சேர்கிறது என்பது அவரவருக்குத்தான் வெளிச்சம். பலர் எதுவுமே வரவில்லை என்கிறார்கள். சிலர் இல்லை, இல்லை கொஞ்சமாக வருகிறது என்று கூறி சிரிக்கிறார்கள்.

எதிலும் ஒரு வெளிப்படைத்தன்மை இல்லை. ஏராளமான மறைமுக வரிகளால் கொரோனா பிடியில் பொருளாதார சுமையால் நசுங்கி இருக்கும் மக்களை மேலும் மேலும் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது மத்திய, மாநில அரசுகள். இன்னும் சிலர் நாட்டுக்காகத்தான் கொடுக்கிறோம் என்று விதண்டாவாதம் வேறு பேசுகிறார்கள். உங்களிடம் இருக்கிறது கொடுங்கள். இல்லாதவர்கள் கதி? இல்லாதவர்களையும் வல்லவர்களாக மாற்றி அமைக்க வேண்டியதுதான் அரசுகளின் பணி. ஆனால் வல்லவர்களுக்கு மட்டுமே இந்த அரசுகள் நல்லவர்களாக மாறி இருப்பதுடன், அவர்களுக்கான சகல வசதிகளையும் செய்து பணிவிடை செய்கிறது. அதே சமயம் ஏழை, எளிய, பாமர மக்கள் நவீன வரித்தீவிரவாதத்தால் நசுங்கி தவித்துப்போய் நிற்கிறார்கள். இது ஆட்சியாளர்களுக்கு நல்லது அல்ல.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்