SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளச்சல் தொகுதியில் ரூ.9.50 கோடியில் வளர்ச்சி பணிகள்: பிரின்ஸ் எம்எல்ஏ தகவல்

2020-10-21@ 19:29:47

பிரின்ஸ் எம்எல்ஏ கூறியதாவது, குளச்சல் தொகுதியில் 11 ஊராட்சிகள்,13 பேரூராட்சிகள் மற்றும் குளச்சல் நகராட்சியும் அமைந்து உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 4 வருடங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கன்வாடி கட்டிடங்கள், பல்நோக்கு கட்டிடங்கள், தார் மற்றும் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆத்திவிளை ஊராட்சியில் ரூ.29,98,828 மதிப்பீட்டில் 10 பணிகளும், மருதூர்குறிச்சி ஊராட்சியில் ரூ.24,79,832 மதிப்பீட்டில் 10 பணிகளும், நுள்ளிவிளை ஊராட்சியில் ரூ.55,70,495 மதிப்பீட்டில் 20 பணிகளும், கக்கோட்டுத்தலை ஊராட்சியில் ரூ.43,85,662 மதிப்பீட்டில் 11 பணிகளும் செய்யப்பட்டுள்ளன.

கட்டிமாங்கோடு ஊராட்சியில் ரூ.22,18,138 மதிப்பீட்டில் 7 பணிகளும், குருந்தன்கோடு ஊராட்சியில் ரூ.49,13,501 மதிப்பீட்டில் 13 பணிகளும்,நெட்டாங்கோடு ஊராட்சியில் ரூ.17,99,814 மதிப்பீட்டில் 4 பணிகளும், தலக்குளம் ஊராட்சியில் ரூ.8,51,441 மதிப்பீட்டில் 5 பணிகளும், முட்டம் ஊராட்சியில் ரூ.36,71,760 மதிப்பீட்டில் 11 பணிகளும், சைமன்காலனி ஊராட்சியில் ரூ.22,42,415 மதிப்பீட்டில் 7 பணிகளும்,வெள்ளிச்சந்தை ஊராட்சியில் ரூ.58,14,122 மதிப்பீட்டில் 16 பணிகளும் செய்யப்பட்டுள்ளன. முளகுமூடு பேரூராட்சியில் ரூ.43,80000 மதிப்பீட்டில் 13 பணிகளும்,கப்பியறை பேரூராட்சியில் ரூ.52,51,000 மதிப்பீட்டில் 17 பணிகளும், ரீத்தாபுரம் பேரூராட்சியில் ரூ.53,97,200 மதிப்பீட்டில் 21 பணிகளும், ஆளூர் பேரூராட்சியில் ரூ.33,60,000 மதிப்பீட்டில் 8 பணிகளும், மண்டைக்காடு பேரூராட்சியில் ரூ.28,00,000 மதிப்பீட்டில் 7 பணிகளும்,

வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சியில் ரூ.66,50,000 மதிப்பீட்டில் 25 பணிகளும், இரணியல் பேரூராட்சியில் ரூ.30,67,000 மதிப்பீட்டில் 10 பணிகளும், வெள்ளிமலை பேரூராட்சியில் ரூ.20,60,000  மதிப்பீட்டில் 5 பணிகளும், நெய்யூர் பேரூராட்சியில் ரூ.41,00,000 மதிப்பீட்டில் 10 பணிகளும்,திங்கள்நகர் பேரூராட்சியில் ரூ.67,52,000 மதிப்பீட்டில் 16 பணிகளும், மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.9,00,000 லட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் ரூ.47,37,000 மதிப்பீட்டில் 4 பணிகளும்,வில்லுக்குறி பேரூராட்சியில் ரூ.9,50,000 மதிப்பீட்டில் 2 பணிகளும், குளச்சல் நகராட்சியில் ரூ.68,66,320 மதிப்பீட்டில் 13 பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 தவிர டி.ஆர்.டி.ஏ.நிதி ரூ.1,46,841 மதிப்பீட்டில் மாணவர்களுக்கு லேப்டாப்கள், பொதுப்பணித்துறை நிதி ரூ.4,20,000 மதிப்பீட்டில் கட்டிமாங்கோடு ஊராட்சியில் சாலை பணியும், மாவட்ட கல்வி அலுவலக நிதி ரூ.4,00,000 மதிப்பீட்டில் முளகுமூடு, மண்டைக்காடு அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளும், மாவட்ட மறுவாழ்வு மைய அலுவலக நிதி ரூ.1,58,580 மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்