SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாரம் 17 பெண்கள் பாலியல் தொழிலுக்கு வருகை...‘ரெட் லைட்’ எண்ணிக்கை அதிகரிப்பு : மகாராஷ்டிராவில் நிலைமை மோசம்

2020-10-21@ 16:57:55

புனே: வாரம் 17 பெண்கள் பாலியல் தொழிலுக்கு வருவதாகவும், மகாராஷ்டிராவில் ‘ரெட் லைட்’ ஏரியா எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி), இந்தியாவில் பெண்களின் பாதிப்பு குறித்து சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் புள்ளி விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதில், 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 105 பெண்கள் காணாமல் போகின்றனர். ஒவ்வொரு வாரமும் 17 பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். நாட்டிலிலேயே அதிக அளவில் ஆள் கடத்தல் மற்றும் காணாமல் போன பெண்கள் வழக்குகளில் மகாராஷ்டிரா முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் உள்ளன. கடத்தப்பட்ட 989 பேரில், 88 சதவீதம் பேர் பெண்கள், 6 சதவீதம் பேர் குழந்தைகள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோ உழைப்பு, உறுப்பு கடத்தல், கட்டாய திருமணங்கள், போதைப்பொருள் சப்ளை, மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றிற்காக கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டனர். காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019ம் ஆண்டில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு வரை, காணாமல் போன குழந்தைகளின் முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா இல்லை. இருப்பினும், 4,562 வழக்குகளுடன் காணாமல் போன குழந்தைகள் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. அவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள். மாநிலத்தில் மும்பை, புனோ போன்ற மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, பல சிறிய மற்றும் நடுத்தர சிவப்பு விளக்கு (ெரட் லைட்) பகுதிகளும் உள்ளன. ஆள் கடத்தலில் உத்தரபிரதேசத்திற்கு அடுத்ததாக மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளதாக, அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்