SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கி கணக்கில் இருந்து ரூ.6.50 லட்சம் வரை எடுத்த்து பப்ஜி விளையாட்டுக்கு செலவிட்ட 17 வயது சிறுவன்: சைபர் கிரைம் உதவியோடு சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை

2020-10-21@ 15:29:28

சென்னை: சென்னை அண்ணா நகரில் ஒய்வு பெற்ற மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.6.50 லட்சம் வரை எடுத்து பப்ஜி விளையாட்டுக்கு செலவிட்ட 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன்(75). இவர் ஒய்வு பெற்ற மருத்துவர். இவரது மகளும் மருத்துவராக உள்ளார். அவர் தற்போது திருமணமாகி காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அண்ணா நகரில் அடுக்குமாடு குடியிருப்பில் முருகேசன் தனியாக வசித்து வருகிறார். இவரை 35 வயதான ஒரு பெண், அவரது கணவர், மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இவரை பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆக. மாதம் முருகேசனின் வங்கி கணக்கில் இருந்து சுமார் 7.50 லட்சம் வரை சிறிது சிறிதாக எடுக்கப்பட்டதன் காரணத்தால் இது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் அண்ணா நகர் குற்றவியல் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது இந்த குடும்பத்தினர் மீது சந்தேகப்பட்டு அவர்களை அழைத்து விசாரணை மேற்கொள்ள இருந்தனர். அப்போது அந்த மருத்துவரும் அவரது மகளும் இவர்கள் மீது விசாரணை நடத்த கூடாது என்றும், இவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இல்லை என்ற காரணத்தால் இந்த வழக்கை காவல் துணை ஆணையர் அலுவலகத்துக்கு மாற்றினர். சைபர் கிரைம் உதவியோடு மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அவரை பராமரித்து வரும் பெண்ணின் சிறுவன் தான், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் ஆடைகள், லேப்டாப், மற்றும் சில பொருட்களை வாங்கியது தெரிய வந்தது. மேலும் பப்ஜி கேமுக்கு தேவையான அம்ப்பேட்களுக்கான பணத்தையும் இதன் மூலம் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த 17 வயது சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்