SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்சாரம் பாய்ந்து இருவர் பரிதாப பலி

2020-10-21@ 04:20:44

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல் சோழன்நகர் ஆடியபாதம் தெருவை சேர்ந்தவர் மாடசாமி(62).  கட்டிட மேஸ்திரி. தனது வீட்டின் மாடிக்கு  படிக்கட்டு அமைக்கும் பணிக்காக திருமுல்லைவாயல் செந்தில்நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த ஜெய்சங்கர்(50) என்ற கட்டிட தொழிலாளியை  அழைத்துள்ளார். பின்னர் மாடசாமி, ஜெய்சங்கர் இருவரும் படிக்கட்டு பணிக்கு பில்லர் அமைக்க ஆக்கர் மூலம்  குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, பூமிக்கு அடியில் சென்ற மின்சார வயரில் ஆக்கர் சிக்கி அதிலிருந்து மின்சாரம்  பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில், உடல் கருகி மாடசாமி, ஜெய்சங்கர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். மேலும், புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்