SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் சாட்டையடி

2020-10-21@ 00:35:11

பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை லஞ்சம் கொடுக்காமல், நம் நாட்டில் எந்த காரியமும் நடக்காது என்ற அவலநிலை நீடிக்கிறது. லஞ்ச ஒழிப்பு என்பது நம் தேசத்துக்கு விடப்பட்ட பெரும் சவாலாக உள்ளது. சட்டமன்றம்- நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், மக்கள் பிரதிநிதிகளே ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்துவிடுகிறது. ‘‘லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம்’’ என்ற அறிவிப்பு பலகை, எல்லா அரசு அலுவலகங்களிலும் பளிச்சிடுகிறது. ஆனால், நடப்பவை நேர்மாறாக உள்ளது.

கணினி மயமாக்கல், ஆன்லைன் முறை என விஞ்ஞானத்தை புகுத்திவிட்டால் லஞ்சம் ஒழிந்துவிடும் என்கிறது அரசு. ஆனால், இவற்றையும் தாண்டி, லஞ்சம் புரையோடிப்போய் உள்ளது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அதிகரிப்பதால், அரசு கஜானாவுக்கு வரவேண்டிய நிதி ஆதாரம் சரிந்துவிடுகிறது. இது, தேச வளர்ச்சியை பாதிக்கிறது. ஒரு தனி மனிதன் செய்யும் தவறு, ஒட்டுமொத்த தேச வளர்ச்சிக்கே பங்கம் விளைவிக்கிறது. கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவர், தனது பணி நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, ‘‘ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை, தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்’’என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய, அதிகாரிகள், மூட்டை ஒன்றுக்கு நாற்பது ரூபாய் லஞ்சமாக வாங்குவது, பிச்சை எடுப்பதற்கு சமம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்போது சாட்டையடி  கொடுத்துள்ளது.

நீதிமன்றம் இப்படி மாறி மாறி சாட்டையடி கொடுத்தாலும் அரசு அதிகாரிகள் திருந்துவதாக தெரியவில்லை. அரசு வகுத்துள்ள விதிமுறைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, காரியத்தை எளிதாகவும், விரைவாகவும் முடித்துக்கொடுங்கள் என ஒரு சிலர் குறுக்கு வழியில் செல்வதின் மூலம், லஞ்ச ஊற்றுக்கண் துவங்குகிறது. பிறகு, மிரட்டியே லஞ்சம் பெறும் நிலை உருவாகிவிடுகிறது. லஞ்சம் கொடுப்பது குற்றமா, வாங்குவது குற்றமா? என்பது கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற விவாதம்போல் ஆகிவிடுகிறது. லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம், ஒவ்வொரு தனி மனிதன் மனதிலும் உதயமாக வேண்டும். இல்லையேல், லஞ்சத்தை ஒழிக்கவும் முடியாது, வேரறுக்கவும் முடியாது. ‘‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது...’’ என்ற பாடல் வரிகள் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pramos1

  கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

 • pamaka1

  20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

 • jammuele1

  ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

 • nuclearscientist1

  ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்