இணையவழியில் சட்டமன்ற தேர்தல் விநாடி வினா போட்டி
2020-10-21@ 00:35:07

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநில அளவிலான இணையவழி வினாடி வினா போட்டி நடக்கிறது. இதில் ஆர்வமுள்ள மக்கள் அனைவரும் பங்கேற்கலாம். போட்டியில் அனைத்து சுற்றுகளும் “Goal Quiz sports” என்ற YouTube இணையவழி தளத்தில் நடத்தப்ப டும். இதில் பங்கேற்கும் ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக முதல் நிலைப்போட்டியில் கலந்து கொள்ளலாம். முதல்நிலை போட்டி மூன்று சுற்றுகளை கொண்டது. முதல் சுற்று போட்டி வருகிற 25ம் தேதி மாலை 4 மணிக்கும், 2ம் சுற்று 26ம் தேதி காலை 11 மணி, மூன்றாம் சுற்று 26ம் தேதி மாலை 4 மணிக்கும் நடைபெறும். சரியான பதில்களை முதலில் பதிவிடும் நபரே பின்வரும் சுற்றுகளில் பங்கேற்க தகுதியானவர். ஒரு நபர் ஒருமுறை மட்டுமே பதிலை பதிவிட வேண்டும். முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.15,000 வழங்கப்படும்.
மேலும் செய்திகள்
வேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு..!!
நாளை மாலை 4.30 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்..! முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
மாநகர செய்தி துளிகள்...
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா
ஜெயலலிதா நினைவிட நிகழ்ச்சியில் பரிதாபம் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாரடைப்பால் மரணம்
12 நாட்களில் 82,039 கொரோனா தடுப்பூசி
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!