SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வமில்லை: எஸ்இடிசியில் குறைவான பயணிகளே முன்பதிவு; கொரோனா பரவலால் பொதுமக்கள் அச்சம்

2020-10-21@ 00:34:00

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை விடுமுறையின்போது பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் கூடுதல் பேருந்துகளை இயக்குவார்கள். கடந்த 2019ம் ஆண்டை பொறுத்தவரை ஆயுத பூஜையானது அக்டோபர் 7ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. அதற்கு முந்தைய இரண்டு நாட்களுக்கும் சனி, ஞாயிறாக இருந்தது. எனவே 4ம் தேதி இரவே பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அடுத்த, அடுத்த நாட்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

அப்போது 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் பேருந்து நிலையங்கள் பிரிக்கப்பட்டு இயக்கப்பட்டன. ஆனால் நடப்பாண்டில் ஆயுத பூஜையானது 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதற்கு அடுத்தநாள் விஜயதசமி, முந்தையநாள் சனிக்கிழமையாகும். எனவே நடப்பாண்டில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை உள்ளது. இவ்வாறு தொடர் விடுமுறை இருந்த போதிலும் சென்னையில் வசிப்போர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. தற்போதைய நிலவரப்படி 3,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆயுதபூஜைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.

இதற்கு நடப்பாண்டில் கொரோனா பரவல் காரணமாக மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள அச்சமே காரணமாகும். மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி கூறியுள்ளன. பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. இதனால் ஊர்களுக்கு சென்ற பலரும் மீண்டும் சென்னைக்கு வராததும் ஒரு காரணமாகும். மேலும் சிலருக்கு வேலை இல்லாததால் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றனர். தீபாவளி பண்டிக்கைக்கு குறைவான நாட்களே இருக்கிறது. எனவே தீபாவளிக்கே சொந்த ஊருக்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பதும் மற்றொரு காரணமாகும்.

இதுகுறித்து அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதைய நிலவரப்படி நாள்தோறும் 700 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆயுதபூஜை வரும் 25ம் தேதி வருகிறது. இதற்கு முன்பதிவு செய்ய பொதுமக்களிடத்தில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. தற்போது வரை 3,000 பேர் அளவுக்கு மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். எனவே இந்த ஆண்டு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை. 1,200 பஸ்களில் மீதம் இயக்கப்படாமல் 500 பஸ்களை சரஸ்வதி பூஜை விடுமுறையின்போது இயக்க திட்டமிட்டுள்ளோம். இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கை பொறுத்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். அதற்கு தகுந்த வகையில் பொதுமக்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்