மேம்பாலத்தில் பைக்கில் சறுக்கி விழுந்த வாலிபருக்கு உதவி செய்த போலீஸ் கமிஷனர்
2020-10-21@ 00:33:50

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சறுக்கி விழுந்த வாலிபரை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மீட்டு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று காலை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. மியூசிக் அகாடமி அருகே உள்ள மேம்பாலத்தில் கார் செல்லும் போது, எதிர் திசையில் பைக்கில் வந்த வாலிபர் மழை காரணமாக முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதினார். இதில், அவர் நிலை தடுமாறி பைக்குடன் சறுக்கி கீழே விழுந்தார்.
விபத்தை நேரில் பார்த்த போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தனது காரில் இருந்து இறங்கி கீழே விழுந்த வாலிபரை மீட்டார். பிறகு காரில் வைத்திருந்த முதல் உதவி பெட்டியை எடுத்து காயமடைந்த வாலிபருக்கு முதலுதவி செய்தார். பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து ராயப்பேட்டை போக்குவரத்து போலீசாரை அழைத்து,காயமடைந்த வாலிபரை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தார். போலீஸ் கமிஷனரின் உதவியை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்.
Tags:
Bike on the flyover slipped teenager assisted police commissioner மேம்பாலத்தில் பைக் சறுக்கி விழுந்த வாலிபருக்கு உதவி செய்த போலீஸ் கமிஷனர்மேலும் செய்திகள்
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை...!
கடசுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க அனுமதி கோரி வழக்கு
தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை: விக்கிரமராஜா கோரிக்கை
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் விருதுகளை மீண்டும் வழங்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
நகைக் கடன்கள் தள்ளுபடி விவரங்களை கேட்டு அனைத்து மேலாண்மை இயக்குநர்களுக்கும் கடிதம்: சங்கங்களின் பதிவாளர் அனுப்பினார்
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!